ரவி கருணாநாயக்க மீது வழக்கு தாக்கல்

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க மீது கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலொன்று செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த வழக்கு தாக்கலை இன்று (வெள்ளிக்கிழமை) செய்துள்ளனர்.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக போலி ஆவணங்களை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததாக கூறியே ரவி கருணாநாயக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சு பதவியொன்றினை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ரணில் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் ரவி கருணாநாயக்க மீது வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.