ரவிக்கு எதிராக உடன் நடவடிக்கை தேவை – ஜே.வி.பி.

ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியது அவர் செய்த மோசடிகளுக்குக் கிடைத்த தண்டனை அல்ல. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை உடன் எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எவராவது ஒருவர் தவறிழைக்கும்போது அவர் அணிந்திருந்த ஆடையைக் கழற்றிவிட்டு வேறு ஓர் ஆடையை அணிந்து கொண்டவுடன் அவர் குற்றமற்றவராக மாறிவிடுவதில்லை.- என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY