ரயில் கட்டணம் 1 திகதி முதல் உயர்வு

ரயில் கட்டணம் அடுத்த மாதம் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படுமென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டண அதிகரிப்புக்கமைய, ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாயில் மாற்றம் ஏற்படாதென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை 10 கிலோ மீற்றர் தூரத்துக்கு அறவிடப்பட்ட ஆகக் குறைந்த கட்டணமான 10 ரூபாய், கட்டண திருத்தத்துக்கமைய 7 கிலோ மீற்றர் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.