ரணில் தலைமையில் புதிய கட்சி அறிவிப்பு !!

புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் சக்தி ஒன்றைக் கட்டியெழுப்புவோம் என்றும் பிரதமர் ரணில் கூறியுள்ளார்.

“நாட்டைக் கட்டியெழுப்புவதே இந்த அரசியல் கூட்டணியின் நோக்கமாகும்” எனவும் பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.