ரணில், சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தரப்பினரை எதிர்வரும் 19ஆம் திகதி அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.