ரணிலுடன் சேர்ந்து புலிகளை உடைத்தவர் கருணா! – அசாத் சாலி

asad_sali-380-seithyபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிளவுபடுத்தியதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கருணா அம்மானை வைத்தே விடுதலைப் புலிகளை அமைப்பை தோற்கடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அஸாத் சாலி, நாட்டில் பிரச்சினையையும் கலவரத்தையும் உண்டுபண்ணி ஆட்சியை மாற்றுவதற்கு அலிபாபாவும் 40 திருடர்களும் திட்டமிட்டு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா, ராவணா பலய, ராவய, சிங்கலே போன்றை அமைப்புக்கள் இந்த நாட்டை புரட்டிப் போடுவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை விளங்கிக் கொள்ளாத அரசாங்கம் எஸ்ரிஎவ் முன்னாள் தலைவர் சரத் சந்திர மற்றும் கருணா அம்மான் ஆகியோரை கைது செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணா அம்மான் வாகனத்தை பாவித்தமைக்காக கைது செய்யப்பட்டதாகவும் அந்த வாகனத்தை பாவிக்க கொடுத்தது யார்? என்பதைக் கண்டுபிடிக்குமாறும் அஸாத் சாலி வலியுறுத்தியுள்ளார்.

கருணா அம்மான் பிணையில் உள்ளதாகவும் சிறிய சிறிய களவுகளைச் செய்பவர்களை விட்டுவிட்டு, பெரிய களவைச் செய்தவர்களை கைது செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY