ரணிலுக்கு மக்கள் ஆதரவு இல்லை – தினேஷ் குணவர்தன

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு நாட்டு மக்களிடையே ஆதரவு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த கட்சியின் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை ஒன்று சேர்ந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மாத்திரமே ஆளுமை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தினேஷ் குணவர்தன இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அவர், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரை மாத்திரமே பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.