ரணிலில் இருந்த விரக்தியிலேயே மைத்திரி மஹிந்தவை பிரதமராக்கினார்: முன்னாள் அமைச்சர் பகீர்

ஐக்கிய தேசிய கட்சியை சஜித் பிரேமேதாச பிளவுபட செய்திருந்தால் கடந்த அரசாங்கத்தின் போது சஜித் பிரேமேதாச பிரதமராக ஆகியிருக்கலாம் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இன்று பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சஜித்தை பிரதமராக்க முடியாததன் காரணமாகத்தான் 2018 ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ரணில் விக்ரசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்தார். சஜித் பிரேமேதாசவிற்கு எமது கட்சியினை முன்னெடுத்து செல்லகூடிய நோக்கமே உள்ளது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை தனித்து செயற்பட வைக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

சஜித்பிரேமேதாச சிறிகொத்தாவை கைப்பற்றத் தேவையில்லை நேரம் காலம் வரும் போது அதனை நாம் கைபற்றுவோம். சஜித் பிரேமேதாச ஜனாதிபதி தேர்தலுக்கு பின் நவம்பர் மாதம் 21ஆம் திகதியின் பின்னர் நன்றி கூறுவதற்காக சிறிகொத்தவிற்கு சென்றபோது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் உங்களை உள் நுழைய அனுமதிக்க முடியாது என கூறினார்

சிறிகொத்தாவை கைப்பற்ற வேண்டுமானால் எம்மால் கைப்பற்றமுடியும் ஆனால் எமக்கு சொந்தம்மில்லாதை நாம் கைப்பற்ற முயற்சிக்கமாட்டோம். அதனை கைப்பற்ற வேண்டுமானால் பலத்தோடு சென்று கைப்பற்றுவோம், அதுமட்டுமல்ல சிறிகொத்தா காரியாலயத்தையும் ஐக்கிய தேசிய கட்சியையும் பலத்தோடு கைப்பற்றி ஐக்கிய தேசிய கட்சியின் தலமைதுவத்தையும் நாம் கைப்பற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.