ரணிலின் பதவி றிஸாட்டிடம் – வர்த்தமானி வெளியானது!

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அமைச்சர் றிஸாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சிற்கு மேலதிகமாக இந்த அமைச்சு பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த அமைச்சு பதவி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.