ரணிலா…? சஜீத்தா…? வலுக்கின்றன சர்ச்சைகள்

கடந்த அமைச்சரவைக் கூட்டம் முடிவுற்றதன் பின்னர் ஜனாதிபதியின் அறைக்குள் தனியாக நுழைந்துள்ள ஐக்கியத் தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்த நிலையில் ரவி கருணாநாயக்கவும் அவர்களுடன் இணைந்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் சந்தேகங் கொண்ட பிரதமர் ரணில், அமைச்சர் கபீர் ஹசீமையும் அழைத்துக் கொண்டு ஜனாதிபதியின் அறைக்கு சென்றுளார் .
இவர்கள் அங்கே வந்ததும் சஜித்தும், ரவியும் அங்கிருந்து கிளம்பியதாகத் தெரிய வருகின்றது, ஐதேகவின் இப்படியான சம்பவங்கள் ஐதேக வட்டாரத்தில் ஜனாதிபதி வேப்பாளர் யார் என்பது தொடர்பில் மேலும் சர்ச்சைகளை வலுபெற வைக்கின்றன.