ரஞ்சனால் சட்டம் சீர்குலைந்துள்ளது

நிலவும் அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக மாற்ற வேண்டும் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

இதன் காரணமாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை பொதுமக்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் இருந்த பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் சட்டத்தை வளைக்கப் பட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவால் சட்டம் சீர்குலைந்துள்ளதாகவும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன மேலும் தெரிவித்தார்.