ரஜினி – விக்கி சந்திப்பு

தமிழகத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

இலங்கையில் தற்போது உள்ள தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது விளக்கமளித்தார்.

இதேவேளை வடக்கிற்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரன் ரஜினிகாந்துக்கு சிநேகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.