ரஜினியை இயக்குவது வெட்டி வேலை – மிஷ்கின் ஓபன் டாக்

நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவது வேஸ்ட் என இயக்குனர் மிஷ்கின் கூறியிருப்பது ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், நீங்கள் ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மிஷ்கின் “ ரஜினியே என்னை அழைத்தாலும் நான் அவருடன் படம் பண்ன மாட்டேன். நான் படத்தை இயக்கும் முறை வேறு. அவர் நடிக்கும் முறை வேறு. என்னுடைய ஹீரோ மூன்று பேரை மட்டுமே அடிப்பார். ஆனால், ரஜினி நின்ற இடத்தில் இருந்து கொண்டே 300 பேரை அடித்து துவம்சம் செய்வார். எனவே, அவருடன் இணைந்து வேலை செய்வது என்பது என்னை பொறுத்தவரை சுத்த வேஸ்ட். அது ஒரு வெட்டிவேலை” என அதிரடியாக பதிலளித்தார்.

மிஷ்கினின் இந்த கருத்து ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மிஷ்கின் நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

LEAVE A REPLY