ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பூர்ணா

பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படம் மூலம் அறிமுகமானவர் பூர்ணா. தொடர்ந்து நகுல், ஆதி, அருள்நிதியுடன் சில படங்களில் நடித்தவர் கடந்த ஆண்டு வெளியான சவரக்கத்தி படத்தில் இயக்குனர் ராமுக்கு ஜோடியாக 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.

சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்த நடிகை பூர்ணா தனது உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து கொஞ்சம் ஒல்லியாக மாறியுள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வித விதமான ஆடைகளில் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு வித்தியாசமான ஆடையில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார் பூர்ணா.