ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சினேகா

‘புன்னகை அரசி’ என்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்ளுக்கு பொருத்தமானவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்பு அமையாததால் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் வந்தார். அதில், தான் நடித்த காட்சிகளை வெட்டி குறைத்து விட்டதாக அவர் அதிருப்தி வெளியிட்டது பரபரப்பானது. தற்போது தெலுங்கிலும் கன்னடத்திலும் தலா ஒரு படம் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கூந்தலை பாதியாக குறைத்த சினேகாவின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இவருக்கு நீளமான தலைமுடியும் மாடர்ன் உடையை விட புடவை கட்டிக்கொள்வதிலும்தான் அழகு என்று ரசிகர்கள் சொல்வது உண்டு. இந்த நிலையில் தலைமுடியை வெட்டி குறைத்ததை பார்த்து அதிர்ச்சியாகி, அழகான தலைமுடியை குறைக்காலாமா? என்று கேள்வி விடுத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY