ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் தாக்குதல் நடத்தப்படும்: சிரியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டில் அதிபருக்கு எதிராக பொதுமக்களில் சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் வன்முறையாளர்களை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் பயன்படுத்தப்பட்டது. சிரியாவில் கடந்த 7 வருடங்களாக அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு தடை செய்த ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி தொடக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் 6 முறை குளோரின் தாக்குதல்கள் நடந்ததில் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதுபற்றி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்பொழுது, பல்வேறு முறை குளோரின் போன்ற ரசாயனங்களை கடந்த சில வாரங்களில் பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு பயன்படுத்தியுள்ளது என தெரிய வந்துள்ளது. அதுபற்றிய சான்றுகள் வெளியாகவில்லை. அப்படி வெளியானால் நாங்கள் சிரியா மீது போர் தொடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY