யூரோவுக்கு போட்டியாக வரும் Renminbi!

i3-phpசீன நாணயமான ரென்மின்பி (Renminbi) சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச கையிருப்பு முறைமையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதியின் பின்னர் இந்த மாற்றம் நிகழவுள்ளது.

அமெரிக்க டொலர், யூரோ, பிரிட்டன் பவுண்டு, ஜப்பான் யென் ஆகிய நான்கு நாணயங்களுடன் ரென்மின்பி அடங்கும் (SDR – Special Drawing Rights) எஸ்.டி.ஆர் முறைமையில், ரென்மின்பி, 10.92 சத விகிதம் பெறும்.

எஸ்.டி.ஆர் முறைமையில் சேர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்க டொலர் மற்றும் யூரோவை அடுத்து, இம்முறைமையில் சீன ரென்மின்பியின் பங்கு மூன்றாவது இடம் வகிக்கிறது.

வளரும் நாடுகளும் புதிய சந்தைகளைக் கொண்ட நாடுகளும் விரைவாக எழுந்து வரும் முன்னேற்றப் போக்கினை இந்த விகிதம் வெளிக்காட்டுகிறது.

இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட அளவில் நன்மைகளை ஏற்படுத்தும். மேலும், எஸ்.டி.ஆர் முறைமையில் சேர்க்கப்பட்ட பிறகு, ரென்மின்பி மீது உலக சந்தைகளின் நம்பிக்கை அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை உலகப் பொருளாதாரம் பற்றிய புதிய முன்னாய்வு அறிக்கையின் சில அம்சங்களை சர்வதேச நாணய நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டது.

இதில் சீனப் பொருளாதாரக் கட்டமைப்பின் நிதானமான மாற்றம் உலகப் பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வை இயக்காற்றலாக கொண்ட சீனப் பொருளாதார கட்டமைப்பு மாற்றம், குறுகிய காலத்தில், உலகப் பொருளாதாரத்துக்கு சவால்களை ஏற்படுத்தும்.

இருப்பினும் நீண்டகாலத்தில் பார்த்தால், உலகப் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியும் என்று மதிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY