யுனோஸ்கோ உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தாஜ் மஹாலுக்கு 2-வது இடம்

உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். மொகலாய மன்னன் ஷாஜகான், தனது மனைவியின் நினைவாக கட்டியது தாஜ்மகால்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஆன் லைனில் உலக அளவில் யுனோஸ்கோ கலாச்சர மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் முதல் இடத்தை கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவில் முதல் இடம் பிடித்தது.

இரண்டாவது இடம் இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் இடம் பிடித்துள்ளது. மேலும் சீன பெருஞ்சுவர், பிரேசில் நாட்டில் உள்ள இஹாஷூ தேசிய பூங்கா, உள்ளிட்ட இடங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்திய அரசின் புள்ளி விவரம் படி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒருவர் தாஹ்மஹாலை பார்வையிட்டு செல்வதாகவும், அதே நேரத்தில் மற்ற உலக அதிசய தளங்களை ஒப்பிடும் போது தாஹ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு என தகவல் வெளியாகி உள்ளது.

தாஹ்மஹாலுக்கு ஆண்டிற்கு சராசியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1983 -ம் ஆண்டு தாஜ் மஹால் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்தை புராதன நகரமாக யுனெஸ்கோ அறிவித்தது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY