யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை மோசமாக நடத்தவில்லை- மஹிந்த

யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை நாங்கள் ஒருபோதும் மோசமாக நடத்தவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லீம் பிரிவின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள அனைத்து சமூகத்தினதும் உரிமைகளை பாதுகாக்க எப்போதும் நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் எந்த சமூகத்தினையும் நாங்கள் ஒருபோதும் மோசமாக நடத்தியதில்லை.

யுத்த காலத்தில் கூட தமிழ் மக்களை மோசமாக நடத்தவில்லை. பயங்கரவாத அமைப்புடன் மாத்திரமே போரிட்டோம்.

இதனால்தான் இன்று நாட்டில் எந்த பாகத்தை சேர்ந்தவர்களும் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

இதனை எமது அடுத்த தலைமுறைக்கும் நாம் வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.