யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை!

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் மக்கள் எதிர்பார்த்த சமாதானமோ பாதுகாப்போ கிடைக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிபந்தனைகள் இன்றி 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கோரிக்கை விடுத்த போதிலும், அது குறித்து அவர் கவனம் செலுத்தவில்லை என சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் மீண்டும் அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.