யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி!

யுத்தம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்கும் திட்டம் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக வருகைதந்த மாணவர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திவாகரன் மற்றும் கலைப்பீட ஒன்றியத்தின் தலைவர் கிரிசாந் மற்றும் பல்லைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.