யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு – மைத்திரிபால சிறிசேன!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து, இன்று மேல் நீதிமன்ற நிதிபதி இளஞசெழியனை தொலைபேசியில் அழைத்த சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற சம்பவத்துக்கு கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் யாழ். பிராந்திய காவல்துறை அத்தியட்சகர் இத்தாக்குதல் நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY