யாழ்.முழுமையான இராணுவ மயமாகின்றது

யாழ். குடாநாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் கடற்படையின் சிறப்பு படகுப் படையணி கொமாண்டோக்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

யாழில் செயற்படும் கடலோரக் காவல்படைக்கு உதவி வழங்கும் நோக்கில் சிறப்பு படையணி இறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 7ம் திகதி பருத்தித்துறைக்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 9 பேரை சிறப்பு கொமாண்டோக்கள் கைது செய்திருந்தனர்.

மண் ஏற்றப்பட்ட நிலையில் இருந்த உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 21ஆம் திகதி வல்லிபுரக் கோவில் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்ற கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் அந்தப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் இராணுவ தளபதியினால், சிறப்பு கொமாண்டோ படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY