யாழ்.பண்பாட்டுப் பெருவிழாவில் முதலமைச்சர் பங்கேற்பு ஆற்றிய உரை (Audio)

a

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று பருத்தித்துறையில் இடம்பெற்று வருகின்றது.

யாழ். மெதடிஸ்த பெண்கள் உயர்த்தரப் பாடசாலையில் நடைபெற்று வரும் குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துக் கொண்டு சிறப்பிக்கின்றார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் குறித்த நிகழ்வில் மதத் தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

b

c

d

LEAVE A REPLY