யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகின்ற குறித்த கூட்டத்தில், எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இந்தக் கூட்டத்தில் வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், வட.மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வட.மாகாண சபையின் பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வட.மாகாண திணைக்களத்தின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.