யாழ்ப்பாணம் வருகிறார் கோட்டாபய!

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே இதனை தெரிவித்தார்..

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தோட்டப்புற மக்கள் மற்றும் வட மாகாண மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் , இதற்கமைவாக தோட்டத் தொழிளார்களின் மாதாந்த சம்பளத்தை மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்த ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 56 நாட்களில் இந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடிந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிமன்றங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் தற்போது நாட்டுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.