யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் ரணில் விஜயம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சமூர்த்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் யாழ்.மாநகர சபை வளாகம் மற்றும் மணியம் தோட்டப் பகுதி உள்ளிட்ட யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளிலுள்ள குடும்பங்களின் விபரங்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் வருகை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.