யாழில் தொடர்கிறது இராணுவ சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (12) அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6 மணி வரை குருநகர் பகுதியில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.