யாழில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள்

யாழ் மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே பதிவாகியுள்ளன.

அத்துடன் ஒரு மோதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்றைய தினம் இரண்டு தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY