யானை சின்னத்தை மாற்ற ரணில் கிடுக்குப்பிடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் நேற்று (12) இரவு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, புதிய கூட்டணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இணைவதாக இருந்தால் யானை சின்னத்துக்கு பதிலாக வேறு தேர்தல் சின்னத்தை பயன்படுத்த முடியுமன் என, ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ராஜபக்ஷவினருக்கு எதிரான பாரிய முன்னணியாக புதிய கூட்டணி உருவாக்கப்படும் போது, அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கினால் கட்டாயமாக வேறு சின்னமொன்றை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு இல்லாமல், வெறுமனே யானை சின்னத்துக்கு பதிலாக வேறு சின்னமொன்றை பயன்டுத்துவதில் அர்த்தம் இல்லையென்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தற்போது, கூட்டணியின் இணைந்துள்ளவர்கள் 2015ஆம் ஆண்டு முதல் யானை சின்னத்திலேயே போட்டியிட்ட நிலையில், தற்போதும் அதே சின்னத்தை பயன்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.