மோடி மீது செல்ஃபி எடுத்த வழக்கு: அடுத்த மாதம் 6–ம் தேதிக்கு ஒத்திவைப்பு

30modi-selfie2கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்களித்த நரேந்திர மோடி, வாக்குச்சாவடிக்கு அருகே பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதையடுத்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 6ந்தேதி நடைபெறுகிறது. மோடி மீது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நிஷாந்த் வர்மா என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு விசாரணையின் போது மாநில அரசு அவகாசம் கேட்டதை அடுத்து, அடுத்த மாதம் 6–ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY