மோசடி செய்பவர்களை நாடாளுமன்றத்தில் குறைப்பதற்கு அநுர முன்வைத்துள்ள யோசனை!

தேசிய மக்கள் சக்தி பிரதிநிதியை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதன் ஊடாக மோசடி செய்பவர்கள் குறைக்கப்படுவார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமாரா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அநுர மேலும் கூறியுள்ளதாவது, “இந்த அரசாங்கத்தில் ஒரு புதிய வகை இயந்திரம் உள்ளது.

அதாவது திருடன்களை பிடித்து சிறையில் அடைத்து வைக்கின்றனர். பின்னர் அவரை விடுதலை செய்கின்றனர்.

அதனை தொடர்ந்து அவர், மிகவும் தூமையானவர் என்பதை போன்று வந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு எங்களுக்கு சவால் விடுகின்றார்.

இந்த திருடர்களின் அச்சுறுத்தல்கள் எங்கள் நாயின் கூக்குரலுடன் கூட மதிப்பு இல்லை. மேலும் இத்தகைய ஆட்சியாளர்கள் நம் நாட்டை உருவாக்குவார்கள் என்று எண்ணுகின்றீர்களா? சில அமைச்சர்கள் பணத்துக்காக நாடாளுமன்றத்தைக் கூட விற்பனை செய்யக்கூடியவர்கள்.

நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் தவிர்ந்து ஏனைய பிரச்சினைகளே இடம்பெறுகின்றன. இத்தகையதொரு நாடாளுமன்றம் எங்களுக்கு அவசியமா?

உண்மையாக கூறவேண்டுமாயின் போகம்பரா சிறைச்சாலையில் உள்ளவர்களை விட மிகவும் மோசமானவர்களே இங்கே உள்ளனர்.

அதாவது தனது வாழ்வாதாரத்துக்காக கசிப்பு ஆகியவற்றை விற்பனை செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் அதற்கு மூலகாரணமாக உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்.

எனவே நாடாளுமன்றத்தில் திருடர்களை குறைக்க வேண்டுமாயின் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதியை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதன் ஊடாகவே அதனை செய்ய முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.