மோகன்ராஜா இயக்கத்தில் அஜித்? ‘மங்காத்தா 2’ உருவாகிறதா?

அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மங்காத்தா. அஜித்துக்கு நெகட்டிவ் வேடம் செட்டாகும் என்பது பில்லா, மங்காத்தா படங்கள் நிரூபித்துள்ளதால் அவர் நெகட்டிவ் கதை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கே வாய்ப்பு கொடுத்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த மோகன்ராஜா, அஜித்தின் 59வது படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை மோகன்ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் அஜித்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்ய காத்திருப்பதாக மோகன்ராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த நிலையில் அஜித்தின் 59வது படம் ‘மங்காத்தா 2’ என்றும், அந்த படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

LEAVE A REPLY