மைத்திரி, ரணிலுக்கு சீன அதிபரின் தாமதமான வாழ்த்து

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அவரிடம் நேரில் கையளித்துள்ளார். நேற்று முன்தினம், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாத இறுதியில் மகிந்த ராஜபக்சவுக்கு சீன அதிபரின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியை, சீனத் தூதுவர் கையளித்திருந்தார்.

கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அதிபரின் வாழ்த்துச் செய்தி கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில நாட்களுக்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருக்கும் சீன அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி, சீனத் தூதுவரால் கையளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்த வாழ்த்துச் செய்திகளில் சீன அதிபர் ஷஜ ஜின்பிங் விருப்பம் வெளியிட்டுள்ளார்.