மைத்திரி கொலைச்சதி – நாமலிடம் விசாரணை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாகவே, நாமல் ராஜபக்சவிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

இந்தச் சதித் திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியர் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகள் தொடர்பான கரிசனைகள் கொண்டது என்பதால், இந்த விசாரணைகள் சுதந்திரமான முறையில் இடம்பெறும் என்று நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.