மைத்திரியை விரட்டச் சதி! திரைமறைவில் காய் நகர்த்தல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விரட்டுவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அக்கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் மைத்திரியை அப்பதவியிலிருந்து வெளியேற்றவதற்கான முயற்சிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் மேற்கொள்ளப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் அரசியல் குருவான ஜீ.எல். பீரிஸின் வழிகாட்டுதலில் தயாசிறி இந்த முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைமைப் பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை ஓரம்கட்டியதன் பின்னர், அந்த இடத்திற்கு தயாசிறியை அமர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.