மைத்திரியின் தொடர் அதிரடி; பரபரப்பாகிறது கொழும்பு!

சிறிலங்கா அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்குரிய விடயதானங்களை உள்ளடக்கியதாக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களுடன் பாதுகாப்பு அமைச்சின் கீழ் 18 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெப்போதுமில்லாத இந்த மாற்றம் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.