மைத்திரியின்அதிரடி ஆட்டம் ஆரம்பம்- மகிந்த, நாமல் உட்பட 60 பேரின் எம்.பி பதவி “அவுட்”

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது மகன் நமல் ராஜபக்ஷ மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 60 எம்.பி.க்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தயாராகி வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நீக்கப்படவுள்ள எம்.பி.க்களின் பட்டியல் மற்றும் அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ளவர்களின் பட்டியலை ஏற்கனவே தயாரித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, அதனை விரைவில் தேர்தல்கள் ஆணையரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுதந்திரக்கட்சியின் 95 எம்.பி.க்களில் 60 பேர் பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. அதன்படி, அவர்கள் வேறொரு கட்சியின் உறுப்புரிமையை பெற்றவுடன், அவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றவும், அவர்களின் எம்.பி. பதவிகளை ரத்து செய்யவும் கட்சிக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்டுகிறது.