மைத்திரிக்கு வழங்கிய உயர் பதவியால் கொந்தளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன! மஹிந்த

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியில் உயர் பதவியை வழங்கியமை சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் கடும் எதிர்ப்பு நிலவுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பெரிய எதிர்ப்பு காணப்படுகிறது. எனினும் எமது கட்சியினர் தேர்தலுக்கு முன்னரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் உடன்படிக்கையை செய்துக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அனுப்பும் நபரையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அந்த கட்சி வேறு ஒருவரை அனுப்பி இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொண்டிருப்போம்.

அவர்கள் அனுப்பவில்லை. சிறிசேனவையே அனுப்பினர். இதனால், நாங்கள் அவரை ஏற்றுகொள்ள வேண்டியேற்பட்டது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.