மைசூர் பருப்பு மற்றும் ரின் மீனிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் மைசூர் பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 65 ரூபாவாகவும் 425 கிராம் எடை கொண்ட ரின் மீனின் விலை 100 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபை வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த கட்டுப்பாட்டு விலையை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.