மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி இவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.

சீனாவின் உயர்மட்ட குழுவினர் இலங்கைவந்து திரும்பியுள்ள நிலையிலேயே, அமெரிக்காவும் பலம்பொருந்திய பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்புகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.