மேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில்

மேல் மாகாண ஆளுநராக இருந்த அசாத் சாலி பதவி விலகியதை அடுத்து மேல்மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில் நியமிக்கப்பட்டுள்ளார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து ஏற்பட்ட பல சர்ச்சைகளை தொடர்ந்து அசாத் சாலி நேற்று தனது இராஜினாமா கருத்தினை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் மேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேஜராக இவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.