மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் சுட்டுக்கொலை கொலையாளி கைது

201604162311034721_Trinamool-Congress-worker-shot-dead-killer-arrested_SECVPF.gifமேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்துக்கு உட்பட்ட ஜுல்பியா பகுதியை சேர்ந்தவர் முகமது அக்தர் (வயது 52). திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என கருதப்படும் இவர் காலையில் அப்பகுதியில் உள்ள சந்தைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த லட்சுமண் சவுத்ரி (40) என்பவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென முகமது அக்தரை சுட்டார். இதில் அக்தர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், லட்சுமண் சவுத்ரியை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY