மேகி நூடுல்ஸ் தயாரிப்பு 3 மாநிலங்களில் மீண்டும் தொடங்கியது: அடுத்த மாதம் விற்பனை

1445946699-6781மேகி நூடுல்ஸ் ஆய்வில்  எந்த நச்சுப் பொருளும் இல்லை என்று நெஸ்லே நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் தயாரிப்பை தனது 3 மாநிலங்களில் மீண்டும் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் முதல் மேகி நூடுல்ஸ் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் ரசாயன கலப்பு அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதால், மேகி விற்பனைக்கு ஜீன் மாதம் தடை விதிக்கப்பட்டது. மேலும் அளவுக்கு அதிகமாக அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பதாகவும் கூறப்பட்டது. தடையை தொடர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பல்வேறு தொழிற்சாலைகளில் அழிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு நடந்த பரிசோதனைகளில் மேகி நூடுல்ஸ் சாப்பிட ஏற்றதாக உள்ளதாக உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் சான்று வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேகி மீதான தடையை மும்பை நீதிமன்றம் விலக்கி கொண்டது.

இந்நிலையில்,நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் தயாரிப்பை மீண்டும் தொடங்கியுள்ளது.அடுத்த மாதத்தில் இருந்து விற்பனை துவங்கப்படும். கர்நாடகா, பஞ்சாப், கோவா ஆகிய 3 மாநிலங்களில் நெஸ்லே நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள தொழிற்சாலைகளில் மேகி நூடுல்ஸ் உற்பத்தி தொடங்கியுள்ளது. அதில் உள்ள ரசாயன கலப்பு குறித்து மீண்டும் ஒரு தடவை பரிசோதித்து தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
.
இது தொடர்பாக நெஸ்லே இந்தியா செய்தித் தொடர்பாளர் செய்தியாளருகளுக்கு அளித்த பேட்டியில் ”கர்நாடகா, பஞ்சாப் மற்றும் கோவாவில் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள எங்கள் ஆலைகளில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி புதிதாக தயாரிக்கப்படும் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள 3ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அந்த ஆய்வகங்கள் எங்களுடைய நூடுல்ஸ் பாக்கெட்டுகளை ஆய்வு செய்து விற்பனை செய்யலாம் என்று சான்று அளித்த பின்னர் எங்களுடைய விற்பனை தொடங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

இதையடுத்து மேகி நூடுல்ஸ் விற்பனையை மீண்டும் அதிகாரப்பூர்வமாக தொடங்க நெஸ்லே நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த மாதம் மேகி நூடுல்ஸ் கடைகளுக்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை உயர் நீதிமன்றம் கூறியதின்படி 3 ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்ட மேகி நூடுல்ஸ் ஆய்வில் அதில் எந்த நச்சுப் பொருளும் இல்லை என்று நெஸ்லே நிறுவனம் கடந்த 16ம் தேதி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY