மெக்சிகோ கடத்தல் மன்னன் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு?

i3.phpசில தினங்களுக்கு முன்பு பிடிபட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போ கஸ்மான் என்ற நபரை, அமெரிக்காவுக்கு நாடு கடத்த மெக்சிகோ அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த நபரைக் கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2014ஆம் ஆண்டிலேயே மெக்சிகோவுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, மெக்சிகோவின் கடும் பாதுகாப்புமிக்க சிறைச் சாலையில் இருந்து சுரங்கப் பாதை அமைத்து தப்பியோடிவிட்ட அந்தக் கடத்தல் மன்னன் கஸ்மான், சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. பல நாடுகளுடன் போதைப்பொருள் கடத்தல் தொடர்புகளை வைத்திருந்த கஸ்மான், வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். இவனைக் கைது செய்வதில் அமெரிக்கா உளவுத் துறையினர் முக்கிய பங்காற்றி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY