மூடப்படும் மாகாண திட்டங்கள்?

வடமாகாணசபையில் தீட்டப்படும் திட்டங்கள் பெரும்பாலும் மாறி மாறி கதிரையில் இருப்பவர்களால் இழுத்துத்து மூடப்படுவது வழமையாகும்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட சுற்றுலா பணியகம் மற்றும் முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவனினால் உருவாக்கப்பட்ட கூட்டுறவு வங்கி என்பவற்றினை மூட முயற்சிகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் வடமாகாணத்தில் பெரும் பண செலவில் அமைக்கப்பட்ட மாலை நேர சந்தைகளில் அரைவாசிக்கு மேல் இயங்காதுள்ளது.

பெரும் பிரச்சாரங்களுடன் நிறுவி திறந்து வைக்கப்பட்ட 14 மாலை நேரச்சந்தையில் தற்போது வெறும் ஏழு மட்டுமே செயற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறு திறக்கப்பட்ட மாலை நேரச்சந்தையில் இரண்டு சந்தை நோக்கத்தை கைவிட்டு வேறு தேவைகளிற்கு பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.