மூஞ்சியை பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி.. அசிங்கப்பட்டாள் இன்ஸ்டாகாரி.. ஷிவானி மாட்டிக்கிச்சு!

இஞ்சி தின்ன குரங்கு சம்மந்தபட்டவங்களே அதை சொல்லிட்டா நல்லா இருக்கும் என கமல் சாட்டையை சுழற்றும் போது, ஷிவானிக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் முழிக்கும் ரியாக்‌ஷனை பார்த்த ரசிகர்கள், மூஞ்சியை பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி என வேற லெவலில் வெளுத்து வாங்கி வருகின்றனர். பார்க்கலாம் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகுதுன்னு!

பிக் பாஸ் வீட்டில் 42 நாட்களை போட்டியாளர்கள் கடந்து விட்டனர். தற்போது வெளியான 2வது புரமோவை பார்த்த ரசிகர்கள், கமல் கிட்ட ஷிவானி நல்லா மாட்டிக்கிச்சு என ட்ரோல் செய்து வருகின்றனர். 2 மில்லியனுக்கும் மேல் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை பெற்றுள்ள ஷிவானி நாராயணன், பாலாவுக்கு பணிவிடை ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருப்பதை பார்த்து அவரது ஆர்மியினரே அப்செட் ஆகி உள்ளனர்.

இனிமேலாவது பாலா பக்கம் சேராமல் தனியா கேம் ஆடுங்க ஷிவானி என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.