மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

பொது செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொது செயலாளர்கள் வி.பி. துரைசாமி, சுப்பு லெட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பொன்முடி, எ.வ.வேலு, கே.என். நேரு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சுதர்சனம், தா.மோஅன்பரசன், ஆவடி நாசர், சுந்தர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுரேஷ் ராஜன், ஆவுடையப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் உள்பட 65 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

வருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் வருவதாக எதிர்பார்க்கப்படுவதால் அதில் தி.மு.க. வெற்றி பெற பிரசார யுக்திகளை வகுப்பது, அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்து சொல்வது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் பாதிப்புக்கு அரசு தேவையான உதவிகளை முழுமையாக செய்யாதது பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்லவும் விவாதிக்கப்படுகிறது.

LEAVE A REPLY