முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்

நாட்டில் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் முஸ்லிம் மக்களை தெளிவூட்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் நேற்று (12) தெஹிவல ஜும்மா பள்ளிவாசலில் இராணுவ அதிகாரிகள் தலைமையில் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இதன்போது இவ்வாறான ஒரு சம்பவம் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஏற்பட்டதை எண்ணி கவலையடைவதாக பிரிகோடியர் அசாத் இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பில் தான் வெட்கம​டைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாகவும் அதனை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.