முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை ஏற்படுத்த மைத்திரி அச்சம் கொண்டிருந்தார்- ஹேமசிறி

ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த உடனடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து சிறிசேன அச்சம் கொண்டிருந்தார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து சிறிசேன அச்சம் கொண்டிருந்தார் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இஸ்லாமிய போதகர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ், அல்ஹைதா போன்ற அமைப்புகளுடன் தொடர்புகளை பேணுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தான் முன்னாள் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டதோடு, அவ்வாறான அமைப்புகளிடம் ஆயத பயிற்சியைப் பெற்று நாடு திரும்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் அவர், அவ்வாறான நடவடிக்கைகளால் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்ததோடு, உடனடி நடவடிக்கைகளை எதுவும் எடுக்கவேண்டாம் என உத்தரவிட்டார் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.